albums

albums
my family!!

Wednesday, January 23, 2013

உன்னைபத்தி தெரியாதா என்ற ஒரே வாக்கியம் சண்டையிலும் சமாதானத்திலும் எதிரெதிர் பொருள் கொண்டு விடுகிறது.
சிகரெட்டுக்கு நெருப்பு கேட்கும்போது மட்டும் வயது வித்தியாசமோ
மரியாதையோ பார்ப்பதில்லை.
பிரச்னையில் இருக்கும் ஒருவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்பவர்களைவிட அவனுக்கு நல்லா வேணும் என்பவர்களே அதிகம்.
சாப்பிட கூட நேரம் இல்லாமல் அப்படி என்ன வேலையோ என பிள்ளையை அலுத்தபடி காலை உணவை மதியம் உண்பவள் பெயர் அம்மா.
முன்னாள் காதலை மறப்பதும் தொப்பையை குறைப்பதும் உலகத்திலேயே கஷ்டமான காரியங்கள்
ஒருகுழந்தை சந்திக்கும் முதல் பொய் புட்டிப்பால்
சிறுவயதில் தாயிடம் நான் உணர்ந்த பாதுகாப்பை முதுமையில் நான் அவளுக்கு உணர்த்தி விட்டால் போதும் என் மரணம் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
இரவுப்பயனத்தில் டிரைவர் கோட்டைவி விடுவதை பார்க்கும்போது வருவதுதான் மரணபயம்.
கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு உட்காருவான்.
அன்பினால் சிங்கத்தின் மீசையையும் பிடுங்க முடியும்.

No comments:

Post a Comment