albums

albums
my family!!

Friday, January 25, 2013

சென்ற தலைமுறையை சேர்ந்த 72 வயது மூதாட்டி நான். அன்றும் சரி இன்றும் சரி பெண்ணுக்கு நகைகள் சீர் செனத்தி என்று செய்வதை மனதார வெறுப்பவள் இருந்தாலும் ஒரு விஷயம் சொல்லுகிறேன்.
வரதட்சினை வாங்காமல் திருமணம் செய்பவர்கள் குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் சும்மா இருப்பார்கள். பிறகு சொந்த வீடு வாங்கவோ பிள்ளையை பள்ளியில் சேர்க்கவோ செலவு வரும்போது குத்தல் பேச்சு பேச ஆரம்பித்து விடுவார்கள்.அந்த பெண் வேதனை பொறுக்காமல் தாய் வீடு வந்தால் அங்கு அவளை பார்த்துல்கொள்ள வயதான தாய் தகப்பனால் முடியுமா இல்லை அண்ணன் தம்பி தான் எவ்வளவு நாளைக்கு தாங்க முடியும். நீ இங்கு வழாவெட்டியாக தங்கினால் அடுத்த பெண்ணை யார் கட்டுவார்கள் பை யனுக்கு யார் பெண் கொடுப்பார்கள் என்று வற்புறுத்தி மாமியார் வீட்டுக்கே அனுப்புவார்கள். அந்த எங்கும் வாழ பிடிக்காமல் தவறான முடிவெடுப்பாள் அவளுக்கென்று போட்ட நகைகளோ பணமோ இருந்தால் அவளது திரைமைக்கேற்ற வாறு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். அதனால் இந்த காலகட்டத்திலும் நகை போட்டு சீர் செனத்தி செய்வது அவசியமே.
இன்றைய காலகட்டத்தில் வரதட்சினை முறை சரியாய் தவறா என்ற குமுதம் ச்நேஹிதி விவாத மேடை யில் பிரசுரமானது.

No comments:

Post a Comment