albums

albums
my family!!

Sunday, March 9, 2014

உங்களையெல்லாம் சந்தித்து வெகு நாட்களாகிவிட்டன. மீண்டும் வருகிறேன்.

Friday, January 25, 2013

சென்ற தலைமுறையை சேர்ந்த 72 வயது மூதாட்டி நான். அன்றும் சரி இன்றும் சரி பெண்ணுக்கு நகைகள் சீர் செனத்தி என்று செய்வதை மனதார வெறுப்பவள் இருந்தாலும் ஒரு விஷயம் சொல்லுகிறேன்.
வரதட்சினை வாங்காமல் திருமணம் செய்பவர்கள் குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் சும்மா இருப்பார்கள். பிறகு சொந்த வீடு வாங்கவோ பிள்ளையை பள்ளியில் சேர்க்கவோ செலவு வரும்போது குத்தல் பேச்சு பேச ஆரம்பித்து விடுவார்கள்.அந்த பெண் வேதனை பொறுக்காமல் தாய் வீடு வந்தால் அங்கு அவளை பார்த்துல்கொள்ள வயதான தாய் தகப்பனால் முடியுமா இல்லை அண்ணன் தம்பி தான் எவ்வளவு நாளைக்கு தாங்க முடியும். நீ இங்கு வழாவெட்டியாக தங்கினால் அடுத்த பெண்ணை யார் கட்டுவார்கள் பை யனுக்கு யார் பெண் கொடுப்பார்கள் என்று வற்புறுத்தி மாமியார் வீட்டுக்கே அனுப்புவார்கள். அந்த எங்கும் வாழ பிடிக்காமல் தவறான முடிவெடுப்பாள் அவளுக்கென்று போட்ட நகைகளோ பணமோ இருந்தால் அவளது திரைமைக்கேற்ற வாறு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். அதனால் இந்த காலகட்டத்திலும் நகை போட்டு சீர் செனத்தி செய்வது அவசியமே.
இன்றைய காலகட்டத்தில் வரதட்சினை முறை சரியாய் தவறா என்ற குமுதம் ச்நேஹிதி விவாத மேடை யில் பிரசுரமானது.
பத்திரிகைகளில் நான் எழுதி பிரசுரமானவை.
விவாதமேடை குமுதம் ச்நேஹிதி
வாழ்க்கைத்துணையிடம் திருமணத்துக்கு முந்தைய காதலை சொல்லலாமா

காதல் என்பது உங்கள் இதயத்துக்கும் உங்கள் காதலர் இதயத்துக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அல்ல நீங்கள் கடிதங்கள் பரிமாறிக்கொண்டு இருக்கலாம்
சினிமா பார்க் பீச் என்று சேர்ந்து சென்றிருக்கலாம் இவையெல்லாம் உங்கள் நண்பர் வட்டாரத்துக்கும் உறவினர் வட்டாரத்துக்கும் தெரியாமல் இருக்க ச
வாய்ப்பே இல்லை.
எதோ சூழ்நிலையில் உங்கள் காதல் நிறைவேறாமல் போயிருக்கலாம் இப்போதுதான் பெண் பார்க்க வருன்போதே பெண்ணையும் பிள்ளையையும் பேச அனுமதிகிறார்களே
அப்போது உங்கள் காதலைப்பற்றி சொல்லி அவருக்கு சம்மதம் என்ட்டிரால் திருமணம் பற்றி பேசலாம் சம்மதம் இல்லையெனில் வேறு ஏதாவதொரு காரணம் சொல்லி உங்களை நிராகரிக்கும்படி கேட்டுககொள்ளுங்கள். இந்த நெர்மௌஇக்காகவெ உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். அதுவரை பொறுத்திருங்கள்.

Wednesday, January 23, 2013

உன்னைபத்தி தெரியாதா என்ற ஒரே வாக்கியம் சண்டையிலும் சமாதானத்திலும் எதிரெதிர் பொருள் கொண்டு விடுகிறது.
சிகரெட்டுக்கு நெருப்பு கேட்கும்போது மட்டும் வயது வித்தியாசமோ
மரியாதையோ பார்ப்பதில்லை.
பிரச்னையில் இருக்கும் ஒருவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்பவர்களைவிட அவனுக்கு நல்லா வேணும் என்பவர்களே அதிகம்.
சாப்பிட கூட நேரம் இல்லாமல் அப்படி என்ன வேலையோ என பிள்ளையை அலுத்தபடி காலை உணவை மதியம் உண்பவள் பெயர் அம்மா.
முன்னாள் காதலை மறப்பதும் தொப்பையை குறைப்பதும் உலகத்திலேயே கஷ்டமான காரியங்கள்
ஒருகுழந்தை சந்திக்கும் முதல் பொய் புட்டிப்பால்
சிறுவயதில் தாயிடம் நான் உணர்ந்த பாதுகாப்பை முதுமையில் நான் அவளுக்கு உணர்த்தி விட்டால் போதும் என் மரணம் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
இரவுப்பயனத்தில் டிரைவர் கோட்டைவி விடுவதை பார்க்கும்போது வருவதுதான் மரணபயம்.
கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு உட்காருவான்.
அன்பினால் சிங்கத்தின் மீசையையும் பிடுங்க முடியும்.

Tuesday, February 16, 2010

அன்புள்ள அனைவருக்கும்

Tuesday, February 2, 2010